யாழ் காரைநகரில் தூக்கில்தொங்கியநிலையில் உடலம் மீட்பு

Font size: Decrease font Enlarge font


குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில்உடலமாக மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர் கருங்காலப் பகுதியைச் சேர்ந்த தேவராசா சண்முகநாதன் ( வயது 50 ) என்னும் குடும்பஸ்தரே தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.குடும்பத் தகராறு காரணமாக குடும்பத்தை விட்டுவிட்டு தனியாக ஒரு வீட்டில் கடந்த 2 வருடமாக வாழ்ந்து வந்துள்ளார்.

மேற்படிக் கிராமத்தின் கிராம சேவகர் அலுவலகமும் அவரது வீட்டிலேயே உள்ளது.இந் நிலையில் கிராம சேவையர் காலையில் சென்று பார்த்த போது வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடப்பதையடுத்து காவல்துறையினருக்கு  தெரியப்படுத்தியதுடன். சம்பவ இடத்திற்கு வருகை தந்தஊர்காவல் துறை காவல்துறையினர்; சம்பவம் தொடர்பாக அவ் விடத்தில் விசாரனைககை மேற்கொண்டதுடன் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்