பிரான்ஸில் இடம்பெற்ற கேணல்கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

Font size: Decrease font Enlarge font

கேணல் கிட்டு உட்பட பத்து வீர வேங்கைகளின் 19 ஆவது வீர வணக்க நிகழ்வு பிரான்ஸில் Salle Jecour Rue Des Rosieres 92000 Nanterre என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் கடந்த 21.01.2011 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

ஈகைச்சுடர் ஏற்றல்,அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
ஈகைச் சுடரினை மாவீரர் மேஜர் அற்புதனின் சகோதரர் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தென்றல் இசைக்குழுவினர் பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவினருடன் இணைந்து வழங்கிய விடுதலைக்கானங்கள் நிகழ்வு இடம்பெற்றது.
கேணல் கிட்டு நினைவான பாடல்கள் இசைநிகழ்வை அலங்கரித்தன.
செவ்ரோன் தமிழ்ச்சங்க மாணவியின் விடுதலை நடனத்தைத் தொடர்ந்து ஆர்ஜெந்தை தமிழ்ச்சங்க மாணவியின் நடனம் இடம்பெற்றது.

தொடர்ந்து தாயகக் கலைபண்பாட்டுக்கழக கலைஞர் சின்னையா தனபாலசிங்கம் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் கிட்டண்ணாவின் ஆரம்பகால மறக்கமுடியாத நிகழ்வுகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.

பிரான்ஸ் தமிழர்கலை பண்பாட்டுக்கழக இசைக் கலைஞர்களின் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்