மாணவியின் மரணம் தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைகள் இடம்பெற்றன!

Font size: Decrease font Enlarge font

பருத்தித்துறை சக்கோட்டை பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி டிலக்சனாவின்  கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவியின் கொலையானது  மாணவியைக் கடத்தியவர்கள் தாம் தப்பித்துக் கொள்வதற்காக அல்லது ஏதேனும் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் சிறிய கத்தரிக்கோல் ஆகும். அதுவும் சலோற்ரேப் வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட கத்தரிக்கோல் என்பதனால் திட்டமிட்டுக் கடத்தியவர்கள் சிறுமியை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் கொலைக்குத் தேவையான ஆயுதம் ஒன்றினையாவது பயன்படுத்தி இருப்பார்கள்.

ஆனால் கொலைக்கு அவ்வாறான ஆயுதம் ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை. இதனால் சிறுமியை கடத்தி கொலை செய்தவர்கள் சிறுமியை கடத்துவதை திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால் கொலை செய்வதை திட்டமிட்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடிவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்தார்.

நோயால் பீடிக்கப்பட்ட உறவினருக்கு உதவிபுரிவதற்காக தினமும் இரவுவேளை பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வது வழக்கமாகும். அங்கு உறங்குவதும் அவரது நடவடிக்கையாக இருந்து வந்தது. இதை அவதானித்து வைத்திருந்த கொலையாளி தனது திட்டத்தின் படி நேற்று வேறு சிலருடன் சேர்ந்து சிறுமியைக் கடத்தியுள்ளார்.
வழமைபோல் உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக தோளில் சாறம் ஒன்றினையும் போட்டுக் கொண்டு வீட்டைவிட்டு இரவு 7 மணியளவில் சிறுமி புறப்பட்டுள்ளார். வீட்டு வாசலில் இருந்து சிறிது தூரம் சிறுமி சென்றதும் கடத்தப்பட்டு மதிலுக்கு மேலால் இழுத்து பக்கத்தில் உள்ள வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட சிறுமி மதிலுக்கு மேலால் மட்டுமே அவ் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஏன் என்றால் வீட்டிற்கு அடுத்த பக்கம் சிறு வியாபார நிலையம் உள்ளது. கடத்தப்பட்ட சமயம் அவ் வியாபார நிலையம் திறந்து இருந்துள்ளது.

எனவே மதிலுக்கு மேலாலேயே சிறுமியை அவ் வீட்டிற்கு கொண்டு சென்றிருக்க முடியும். சிறுமி மதிலுக்கு மேலால் இழுத்துக் கொண்டு செல்லப்பட்டதில் இருந்து இச் சம்பவத்தில் பலர் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது.

அவ்வாறு யாரும் இல்லாத வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டவுடன் சிறுமி கடத்தியவர்களின் கட்டுப்பாட்டினையும் மீறி கத்தி கூச்சலிட்டுள்ளார். கத்திய சத்தத்தினை அடக்குவதற்காக வாயை சலோற்ரேப்பால் சத்தம் வெளியில் வராமல் ஒட்டியுள்ளனர். சத்தம் கேட்டதை அலட்சியமாக அயல் வீட்டில் உள்ளவர்கள் விட்டுவிட்டனர்.

கடத்தப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க பெரிதும் சந்தர்ப்பம் இல்லை. சடலத்தில் சிறுமி பாலாத்;காரப் பட்டத்திற்கான எந்தவொரு அடையாளங்களும் இல்லை.

உறவினர் வீட்டிற்குச் செல்லாத சிறுமியை தேடி சிறுமியின் வீட்டிற்கு வந்த அவர்களின் உறவினர்கள் கூறியதையடுத்தே சிறுமி காணாமல் போயுள்ளது அவரின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இரு வீட்டாரும் இணைந்து மேற்படிப் பகுதியில் தேடுதல் நடத்திய போது அச் சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீட்டிலேயே வாயை சுற்றி சலோற்ரேப் ஒட்டப்பட்டு கழுத்தில் கத்தரிக் கோலால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் முழுவதும் சுமார் 4 மணித்தியாலங்களுக்குள் நடைபெற்றுள்ளது. சிறுமியின் சடலத்திற்கு கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோல் சடலத்திற்கு அருகில் போடப்பட்டிருந்தது.

மேற்படிக் கொலைக்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன. அவற்றை வைத்து மிக சுலபமாக கொலையாளியைக் கண்டுபிடித்துவிடலாம்.

கொலை செய்யப்பட்ட சிறுமி காதல் பிரச்சினை காரணமாகதான் கொலை செய்யப்பட்டார் என்று அயலில் உள்ளவர்கள் தெரிவித்திருந்த போதும், மேற்படிச் சிறுமியின் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மேற்படிச் சிறுமி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் மிகச் சிறந்த கற்கும் திறன் உடைய மாணவி பின்தங்கிய எமது பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகம் செல்வார் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்.

உயிருடன் இருந்திருந்தால் அந்த நம்பிக்கையை நிச்சயம் அவர் நிறைவேற்றி இருப்பபார் என்றும் குடும்பச் சண்டைகளோ அல்லது பாடசாலையில் சக மாணவர்களுடன் முற்பகை எதுவும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

குடும்பத்தினரால் சந்தேக நபர் என்று அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் 24 மணித்தியாலங்கள் ஆகியும் அதுவரை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்