யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவியினை இழந்துள்ளார்

Font size: Decrease font Enlarge font


யாழ். மாநகர சபையின் உறுப்பினரான சு.நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிசாந்தன் ஈ.பி.டி.பி கட்சி சார்பில் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் அவர் அக்கட்சியின் கொள்கைக்கும் சபை நடவடிக்கைக்கும் எதிராகச் செயற்படுவதாகக் கூறி அக் கட்சியின் தலைமை அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்(262 ஆம் அத்தியாயம்) 10அ (1) (அ) என்னும் பிரிவின் கீழ் யாழ். மாநகர சபை தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார்.

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்