ஆலோசனைக்குழுவிற்கு சவேந்திரசில்வா-பான்கீமூன் தெரிவு.

Font size: Decrease font Enlarge font

ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அமைதிகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். மேற்படி குழுவில் ஆசிய- பசுபிக் நாடுகளை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

போரின் இறுதி நாட்களில் தமிழ்மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு போர்குற்றத்தில் ஈடுபட்ட 58 டிவிசன் படைத்தளபதியாக இருந்த சவிந்திரசில்வா போர்குற்றத்தில் ஈடுபட்டா் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் பான்கீமூனால் அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை போர்க்குற்வாளியினை பாதுகாக்கும் செயலாக அமைகின்றது குறிப்பிடத்தக்கது.

 

 


தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.

- தமிழீழ தேசியத் தலைவர்