காவல்துறை அதிகாரம் வழங்குவதில் பாரிய சிக்கல்.
இனப்பிரச்சனை தீர்விற்கு காணி அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை ஆனால் காவல்துறை அதிகாரத்தை வழங்குவதில் பாரிய சிக்கல்உள்ளது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைதையும் நாட்டில் நடைமுறைப்படுத்தினால் புதி பிரச்சனைகள் உருவாகும் என ஜ.தே.கட்சியும்,தமிழ்தேசியக்கூட்டமைப்பும்,ஜே.வி.பியும் விரைவில் பாராளமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கவேண்டும் என்று அரசாங்கம் அழைப்புவிடுத்துள்ளது.இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் உறுதியான கொள்கைரீதியிலானதுமான நிலைப்பாட்டிலேயே உள்ளது 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்லும் தீர்வு திட்டம் என்பது செனட் சபை முறைமiயினையே குறிப்பிடுகின்றது செனட்சபைமுறையினை இந்திய மத்தியஅரசும்,எதிர்கட்சி தலைவிலும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.காணி அதிகாரங்கள் வழங்குவதில் சிறு சிறு பிரச்சனைகள் உள்ளன அதனை தீர்;த்துக்கொள்ள முடியும் ஆனால் காவல்துறை அதிகாரம் என்பது பிரச்சனைக்குரியவிடயமாக உள்ளது.இதனைமுழுஅளவில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறீலங்காவின் ஊடகத்துறைஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















