மகசின் சிறையில் தமிழ்அரசியல்கைதிகள் உடமை சூறை.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலவரத்தின் போது தமிழ்அரசியல் கைதிகளின் உடைகள் மற்றும் அவர்களது வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரதிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையுள் கலவரம் இடம்பெற்றபோது சிங்கள் கைதிகளுக்கு தமிழ்அரசியல் கைதிகள் ஒத்துளைப்பு வழங்கவில்லை மற்றும் அவர்கள் தமதுபோராட்டத்திற்கு வெளியில்வரவேண்டும் என்று சிங்கள கைதிகள் வற்புறுத்தியுள்ளார்கள்.இதன் அச்சத்தில் இருந்ததமிழ் அரசியல் கைதிகளின் விடுதிகளை உடைத்து உள்நுளைந்த சிங்கள கைதிகள் தாக்குதல்களை நடத்தமுற்பட்ட வேளையே கால்துறை அதிகாரிகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட தமிழ்அரசியல் கைதிகளின் உடமைகள் எவையும் இல்லாத நிலையில் அவர்களது அறைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















