கோத்தபாயவின் கொலைக்குழுவான 'சிங்கங்குட்டிகள்' : வீக்கிலீக்ஸ்
ஜன 27, 2012
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்தியதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.2007 ஆம் வருடம் பிப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை சுதந்திரக் கட்சி நிதிப்பொறுப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரா, அமெரிக்கத் தூதர் ரோபர்ட் பிளேக்கிடம் இத் தகவலை தெரிவித்தாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற மாவட்டங்களில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்களைக் கடத்தவும், சித்திரவதை செய்யவும், அவர்களைக் கொலை செய்யவும் இவ் சிறப்பு குழு உருவாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சவின் ஓப்புதலுடன் அன்றைய படைத்தளபதி சரத் பொன்சேகா இத்தகைய சட்டத்திற்குப்புறம்பான கொலைக் குழுக்களை உருவாக்கியிருந்தார் எனவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பிணங்களைக் கடலில் வீசி எறிந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிணங்களை கடலில் வீசும் நடவடிக்கைகளிலில் 'அம்பாந்தோட்டைப் பூனைகள்' எனும் சிறப்பு குழு செயற்பட்டதாக அமெரிக்கத் தூதர் ரோபர்ட் பிளேக்கிடம், மங்கள தெரிவித்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















