கொழும்பு-மட்டக்களப்பு பேருந்தில் சென்றவர் பலி.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு காத்தான் குடிநோக்கி பயணித்தபேருந்து ஊர்கடவத்தை என்ற இடத்தில் பேருந்தில் இருந்த பயணிஒருவர் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த ஏனைய பயணிகள் நடத்துனரிடம் தகவலை தெரிவித்துள்ளார்கள்.
மயக்கமடைந்த நிலையிலேயே காணப்பட்ட குறித்த நபர் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பின்னர் காவல்துறையினர் அவரை எடுத்துசென்று கொழும்பு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைசெய்தபின் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.மட்டக்களப்பு,பெரியகல்லாறினை சேர்ந்த 50அகவையுடைய தம்பிராசா புவிராஜ் என்பவரே உயிரிழந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விடுதலையை முன்னெடுக்கும் புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற ரீதியில் புலிகள் இயக்கமானது, காலத்திற்குக்காலம் வரலாற்றுத் தேவைகளுக்கு ஏற்ப புதிய போராட்ட உத்திகளை அறிமுகம் செய்திருக்கின்றது. அத்துடன் அந்தப் போராட்ட முறைக்கு முன்னுதாரணமாகவும் இலக்கணமாகவும் திகழ்ந்த அற்புதமான அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளது. இன்று எமது விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்படும் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக - வழிகாட்டியாக - திகழ்வதற்கு இந்தத் தனித்துவமான பண்புகள்தான் காரணம்.
- தமிழீழ தேசியத் தலைவர்

















